வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை பேராளர்களுக்கு ஒரு வேண்டுகோள்
முப்பத்தைந்து வருட கால பேரவையின் (FeTNA) தொடக்க காலத்தில் இருந்து தமிழர்களின் மொழி பண்பாடு கலை மற்றும் உரிமை சார்ந்த செயல்பாடுகளை வடஅமெரிக்காவில் பேரவை மேற்கொண்டு வருகிறது. 2009 இற்று பின்னர் தமிழர் உரிமை விடயங்களில் பேரவை மீது கனேடிய தமிழ் பேரவை (Canadian Tamil Congress — CTC) செல்வாக்கு செலுத்தி வருகிறது. 2009 இற்று பின்னர் கனேடிய தமிழர்கள் சிறிலங்காவின் தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி முன்னெடுப்புகளை மேற்கொள்ள, கனடிய தமிழர் பேரவை (CTC) தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரசை காப்பாற்றும் முறையில் இயங்கி வருகிறது. இன்றைய FeTNA பேராளர்களுக்கு CTCஇன் செயல்பாடுகள், மற்றும் அதன் உறுப்பினர் எண்ணிக்கை 2009 இல் ஆயிரம் ஆக இருந்து தற்போது முந்நூறுக்கும் குறைவாக சென்றது பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த தொடர்கட்டுரை வரையப்படுகிறது. கட்டுரையின் அடிப்பகுதியில் ஆதாரங்களின் இணைப்பு தரப்படுகிறது. இவ்விடயத்தில் அக்கறை இல்லாது இருந்தால் எதிர்காலத்தில் உலகில் மேலும் பல இடங்களில் தமிழின இருப்பு அருகிவிடும்.
இந்த கட்டுரையில் FeTNA இல் CTC 2009 இல் இருந்து செயல்குழுவில் இருப்பதால் தமிழரின் நீதிக்கான முயற்சிகளில் எப்படியான பாதிப்புகள் இருந்தன என்பதை சுருக்கமாகவும்.
அடுத்த தொடர் கட்டுரைகளில், பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்படும்.
- தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அதிபர் ராஜபக்சேயை 2023 இல் CTC சந்தித்தது
- 2001 இல் CTC தொடங்கியதில் இருந்து இன்று வரை அதன் வரலாறு
- தமிழீழ நடைமுறை அரசின் அழிப்பின் பின்னரான வரலாற்று மறைப்பு
- CTC FeTNA ஐ தமது தவறுகளை மறைக்கபயன்படுத்தியமை
- 2013 FeTNA Toronto பேரவை தமிழ் விழா — மீள்பார்வை
- எதிர்கால தமிழருக்கான நீதியும் சங்க கால வரலாற்றின் தொடர்ச்சியாக தமிழீழ வரலாற்றை பேணல் .
உலகில் பேரரசுகளும் அரசுகளும் காலத்திற்கு காலம் மாறும், இனக்குழுமங்கள் நீண்ட காலம் நிலைத்திருக்கும். தமிழ் நாட்டிலும் தமிழீழத்திலும் வாழும் தமிழினம் 2800 ஆண்டுகளுக்கும் மேலான இறையாண்மை கொண்ட இனக்குழு ஆகும். உலகில் இன்று தமிழர்கள் எங்கும் பரந்து வாழ்ந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு நாடில்லை குரல் கொடுக்கவும் நாடு இல்லை. Singapore, Mauritius போன்ற நாடுகள் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் உரிய இடம் கொடுத்து வைத்திருக்கும் காலத்தில், பல தேசங்களில் தமிழர்கள் அழிவையும் எதிர் கொள்கின்றனர். கனடாவில் கடந்த ஐம்பது வருடத்தில் தமிழர்களின் உழைப்புக்கும் கனடாவின் வளர்ச்சியில் அவர்களின் பங்கையும் பாராட்டும் வண்ணம் தை மாதத்தை தமிழ் மரபுத்திங்கள் ஆகவும். தமிழ் உணர்வாளர்களினதும், மனித உரிமை ஆர்வலர்களினதும் பல தமிழ் அமைப்புகளினதும் பல ஆண்டுகால அயராத முயற்சியால் May 18 ஐ தமிழின அழிப்பு நினைவு நாள் (Tamil Genocide Remembrance Day) ஆகவும் அங்கீகரித்துள்ளது.
கடந்த வருடம் முன்னாள் சிறிலங்கா அதிபர்களான கோத்தபாயா மற்றும் ராஜபக்சே மீது தடைகளையும் கனடிய அரசு விதித்திருந்தது.
2023 இல் FeTNA இன் ஆதரவுடன் இருக்கும் கனேடிய தமிழர் பேரவை (CTC) கனடா தடைகளை விதித்த அதே தமிழின அழிப்பை செய்த ராஜபக்சேவை சந்தித்து இனஅழிப்பை மறைக்கவும் கனடிய அரசின் மேல் கரிபூசும் முயற்றசிக்கும் தமிழீழ மற்றும் கனேடிய தமிழ் அமைப்புகள் பல CTC துரோகத்தனத்தை வெளிப்படையாக கண்டித்திருந்தன.
1990 இல் இருந்து May 18, 2009 வரை இருந்த தமிழீழ நடைமுறை அரசை சர்வதேச சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் அழிப்பது என்பது பல நாடுகளின் சூழ்ச்சி திட்டம். இந்த இனஅழிப்பின் பின் அதை மூடிமறைக்கும் திட்டமும் அந்த நாடுகளிடம் இருந்திருக்கும். அனால் FeTNA போன்ற ஒரு கூட்டு அமைப்பு CTC போன்ற அமைப்பு எப்படி செயல்குழுவில் தொடர்ந்து இருக்க முடிந்தது என்பதை பேரவை பேராளர்கள் சீர்தூக்கி பார்க்கவேண்டியது அவசியம். தொடர்ந்தும் CTC அமைப்பிலிருந்து பிரதிநிதிகள் பேரவை செயல்குழுவிற்கு கொண்டு வருவது தவிர்க்கப்பட வேண்டும்.
பல வருடங்களாக கனடிய தமிழர்கள் CTC தமது சிறிலங்கா அரசு ஆதரவு சார் செயல்பாடுகளை கைவிடுவார்கள் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அவை அதிகரித்தே செல்கின்றன. இதனால் தற்போது ஒன்றில் CTC ஐ பொது தளத்தில் இருந்து விலக்கி வைப்பது அல்லது அதை மறு சீரமைப்பது எனும் முடிவில் உள்ளனர். CTC இன் இந்த சிறிலங்கா அரசு சார் செயல்பாடுகள் இனியும் தொடர்ந்தால் கனேடிய அரசு இது வரை ஈழ தமிழர்களுக்கான நீதி விடயத்தில் செயலாற்றும் வேகம் மழுங்கடிக்கப்படும் என்பதை பல கனடிய தமிழர் தரப்பினரும் இன்று உணர்ந்துள்ளனர். பல CTC நிர்வாகிகள் இதுவரை விலகி இருந்தாலும், CTC அதன் நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. 2006 இல் இருந்து CTC இன் முழு அதிகாரங்கள் கொண்ட நிர்வாக இயக்குனரும் இன்னமும் பதவிவிலகவில்லை. இம்முறை CTC பிரதிநிதிகள் யாரையும் பேரவை செயல்குழுவுக்கு தெரிவு செய்யாது விட வேண்டியது ஏன் அவசியம் என்பதை தொடர்ந்து வரும் கட்டுரைகளில் விரிவாக பார்க்கலாம்.
அடுத்த கட்டுரையில் மேலும் தொடரும்.
கட்டுரையாளர்: வேல்
- “..Parliament last year unanimously adopted the motion to make May 18 Tamil Genocide Remembrance Day.” https://www.pm.gc.ca/en/news/statements/2023/05/18/statement-prime-minister-first-tamil-genocide-remembrance-day
- “Canada is imposing sanctions against the following individuals who committed gross and systematic violations of human rights during Sri Lanka’s civil conflict, which occurred from 1983 to 2009” .https://www.canada.ca/en/global-affairs/news/2023/01/sanctions-imposed-on-sri-lankan-state-officials.html
- “Tamil youth in Switzerland have released a book documenting life in the Vanni during the ceasefire, as part of attempts to commemorate periods of self rule throughout Tamil history” .https://www.tamilguardian.com/content/%E2%80%98structures-tamil-eelam%E2%80%99-glimpse-back-de-facto-state, https://tamilnation.org/tamileelam/defacto/
- “The CTC is effectively complicit in the Sri Lankan state’s approach to erase the truth about the war and the Tamil genocide by remaining acutely silent. The CTC does not recognize or even merely acknowledge genocide” .https://www.facebook.com/CanadianTamilCollective