2009 May 18 — தமிழின அழிப்பு நினைவுநாள்
1983 July 23 கறுப்பு ஆடி — 2009 May 18 — தமிழின அழிப்பு நினைவுநாள்
தமிழர்கள் முன்னர் கறுப்பு ஆடி என்பதற்கு பதிலாக 1984 ஆண்டிலிருந்து தமிழின அழிப்பு நினைவு என கூறி அதை ஆண்டு தோறும் நினைவு கூர்ந்து இருப்பின் உலகம் தமிழரின் வரலாற்றை தெளிவாக அறியும் வாய்ப்பு இருந்திருக்கும். இறந்தவர்களுக்காக கும்பிட்டு விளக்கேற்றி மட்டும் போவதென்றால் எந்த பெயரும் சொல்லலாம். ஆனால் வெறுமனே நினைவு கூறுவதையும் தாண்டி ஒரு செயல்பாடு வரலாறு இருக்குமென்றால். சொல்லும் தலையங்கத்தில் அது சரியாக சொல்லப்பட வேண்டும்.
2009 இன் பின்னர் May 18 மிக தெளிவாக தமிழின அழிப்பு நினைவுநாள் (Tamil Genocide Remembrance Day) என்று கூறுவதற்கு காரணம் பல.. முதலாவது அது வெறுமனே நீர்மல்கி வணங்கி போகும் நிகழ்வு அல்ல. அன்றைய காலப்பகுதியிலும் அதன் பின்னரும் தமிழருக்கு நடந்த கொடுமைகள் இலகுவில் கடந்து போக கூடியவை அல்ல. அது அடுத்த பல சந்ததிக்கும் உலகுக்கும் தொடர்ந்து தமிழர் இழந்த இறைமையை சொல்லும் செய்தி. தமிழீழத்தில் இருக்கும் தமிழரை உலகம் இனி தொடரும் இனப்படுகொலையில் இருந்து காப்பாற்றும் கடமையை உணர்த்துவதும் கூட. பெயரை எப்படியோ வைத்து உள் விடயத்தில் இனப்படுகொலையை சொல்லலாம் என்பது மிக பெரிய பொய்.. அது ஏமாற்றும் தெரிந்தே ஏமாற்றுவது ஆகும். அந்த ஏமாற்றை பலவருடம் கடந்து தமிழர்கள் செய்யவேண்டிய தேவை இல்லை..
இரண்டாவது. May 18 இல் கொல்லப்பட்ட தமிழர்கள் உலக நிரலில் திட்டமிட்டு தான் கொல்லப்பட்டனர். ஐநா விற்கு அங்கு எத்தனை தமிழர்கள் இருந்தனர் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது நன்கு தெரியும். இப்படி திட்டமிட்டு இனிவரும் காலத்திலும் தமிழர்கள் கொல்லப்படலாம்.. இனப்படுகொலை என்பதை தெளிவாக சுருக்கமாக உலகுக்கு உணர்த்தினால் தான் இனி வரும் கால தமிழர் இழப்புகளை தடுக்க முடியும்.
மூன்றாவது, May 18 இல் தமிழர்கள் இழந்தது ஒரு தன்னாற்சி கொண்டு தமிழர் அறம் விழுமியம் சேர்ந்த தமிழீழம் என்ற நாட்டையும் தான். அந்த நாட்டை காத்த படைகளை இன்று உலக நாடுகள் அவர்கள் இல்லாத காலத்திலும் ஏமாற்றுக்கு தடை என்று சொல்லலாம்.. ஆனால் என்றோ ஒருநாள் அந்த தடைகள் நிச்சயம் இல்லாது போகும். தமிழரின் இறையாண்மை கொண்ட நாடு அழிக்கப்ட்டதைஇந அழிப்பு என்று தான் நினைவு கூற வேண்டும். அப்போது தான் ஒரு இன அழிப்பை எதிர்த்து தான் தமிழ் புலிகள் போராடி இருந்தனர் என்ற உண்மையும் தெளிவாக கூறப்படும்.
நான்காவது, தேசிய துக்க நாள், முள்ளிவாய்க்கால் நாள், என்று பல பெயர்களில் அழைத்தால் யாருக்குமே அது என்ன நாள் என்று புரியாது.. இன்னும் ஐம்பது வருடத்தின் பின்னரும் மாவீரர் நாள் போல் இந்த நாளும் புலம் பெயர் தேசங்களில் ஆவது நினைவு கூறப்பட வேண்டும்.. மாவீரர் நாள் முப்பது ஆண்டு காலத்தின் பின்னரும் இன்றும் அதே பெயரில் தான் உள்ளது.. இன்னும் ஐம்பது வருடத்தின் பின்னரும் அதே பெயரில் தான் இருக்கும்.
இன்றைக்கு கறுப்பு ஆடி என்று சொன்னால் பலருக்கு தெரியாது அது சார்ந்த உலக நிகழ்வுகள் 2009 இற்கு முன்னர் போல் நடைபெறுவதில்லை. கறுப்பு ஆடி என்பது ஒரு உள்நாட்டு நிலவாகவே பார்க்க படுகிறது. இனி வரும் வருடங்களில் ஆவது May 18 தமிழர்இந அழிப்பு நினைவு நாள் என்று அழைக்கப்படுவது தான் நல்லது. இன அழிப்பு என்பது உள்நாட்டு விடயம் அல்ல. அது எதிர்காலத்தில் வேறு நாடுகளையும் தலையிட்டு தமிழரை காக்கும் நிலைக்கு ஓரளவு உதவும். 2009 இல் R2P (Responsibility to protect) இன அழிப்பு என்று 1983 இலிருந்து நினைவு கூறப்பட்டிருந்தால் ஒரு கருவியாக இருந்திருக்கும் வாய்ப்பு இருந்தது. இன அழிப்பு என்றால் MP வரமாட்டார் அல்லது அரசில் வேலை கிடைக்காது என்ற காரணங்கள் இனி இல்லை. இனியும் புலம் பெயர் தமிழ் அமைப்புகள் அக்கப்போரை விடுத்து சுயநலம் துறந்து சிந்திப்பது சிறந்தது. நிகழ்வின் பெயர் தான் அதன் முதல் விளக்கம்.
வேல்